சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தீ : தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது தீ

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச செயலக நிதிப்பிரிவில் இன்று பகல் திடீரென தீப்பற்றி கொண்டதனால் ஆவணங்கள் பலதும் தீக்கிரையானது. பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல்.எம்.பாரிஸ் பதில் கடமைக்காக வேறு இடத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த நிலையிலையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மின்குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சம்மாந்துறை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பிடித்த தகவலறிந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை, மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை என்பன துரிதகதியில் களமிறங்கி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாரிய சேதங்களிலிருந்தும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.