கந்தளாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்.

கதிரவன்

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் மருத்துவர் கொஸ்தா கந்தளாய் வைத்தியசாலைக்கு அத்தியட்சராக நியமிக்கப்பட உள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்து திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என் கே டி எஸ் குணவர்தன அவர்களின் மகன் நளின் குணவர்தன , ஜெயசேகர ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

கந்தளாய் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதனை செயல்படுத்துவதற்காக மருத்துவர் கொஸ்தா அங்கு நியமிக்கப்பட இருப்பதாக கூறியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.