மட்டக்களப்பில் 12 மணிநேரத்திற்குள் இரு மரணங்கள் 69 தொற்றுக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்   இன்று(17.05) காலை பத்து மணியிலிருந்து இரவு 10மணிவரையுள்ள 12மணித்தியாலத்திற்குள்   இருவர்  மரணமடைந்துள்ளதுடன் 69 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் மட்டக்களப்பில் பதிவாகியுள்ள அதிகூடிய தொற்றும் மரணங்களுமாகும்.

மரணமடைந்தவர்கள் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியைச்சேர்ந்த 82வயது பெண் அத்துடன் ஆரையம்பதி செங்குத்தர் வீதியைச்சேர்ந்த 72 வயது பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குள்ளானவர்களில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே ஆகக்கூடுதலான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுக்குள்ளானவர்களில் இரண்டு கர்ப்பிணி பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த ஏழுநாட்களில் ஏற்பட்ட தொற்றுக்களின் அடிப்படையில் கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவிலேயே ஆகக்கூடுதலான 77 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது.