முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவலை பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலை இன்று இரவு (திங்கட்கிழமை) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

குடியிருப்பாளர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்த பகுதிகளில் தனிமை நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறியது.