மட்டக்களப்பு என்.கே.டீ ரத்னம் அற்ட்கோ நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான1.52 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை  வழங்கிவைத்த மட்டக்களப்பு என்.கே.டீ ரத்னம் அற்ட்கோ நிறுவனத்தின் உரிமையாளர் நல்லரெத்தினம்  உட்பட நிறுவனத்தாருக்கு மட்டக்களப்பு சமுகம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

தற்போது வேகமாகபரவிவரும் கொரனா தொற்றின்  பரிசோதனைகள் கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் மாத்திரமே பரிசோதிக்கப்பட்டுவருகின்றது.

மட்டு போதனாவைத்தியசாலையில் குறைந்த வசதிகளுடனயேயே இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இக்குறைபாட்டினை நிவர்த்திசெய்யும் நோக்குடன் மாவட்டத்தில் உள்ள பல கொடையாளர்களுடன்மட்டு அரசாங்க அதிபரும், வைத்தியசாலை நிருவாகமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் மட்டக்களப்பு என்.கே.டீ ரத்னம் அற்ட்கோ நிறுவனம் ஜேர்மனி தயாரிப்பான 1.52மில்லியன் பெறுமதியான பரிசோதனை இயந்திரத்தை கைளித்துள்ளது.

இதே போன்று புலம்பெயர்ந்துவாழும் கிழக்குமாகாணத்தைச்சேர்ந்த மக்களும் இவ்வாறான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட உபகரணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, 231 வது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி,
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி,  பிரதேச செயலாளர்களான திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் வீ.வாசுதேவன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.