கொவிட் தடுப்பூசி வழங்குவதில் அரசு அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

கொவிட் தடுப்பூசி வழங்குவதில் அரசு அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டாரா தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரதேச செயலாளர்கள், பிரதேச பணியாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் கிராம  சேவையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கொவிட் மீது தடுப்பூசி போடுமாறு கோரியுள்ளனர்.

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று (16) தம்புள்ள பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.