திங்கட்கிழமை முதல் காத்திருக்கும் புதிய சிகிச்சை முறை

PCR பரிசோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டு நோய் அறிகுறி இல்லாத நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

வீட்டில் தடுத்து வைத்திருக்கும் போது ஏதேனும் ஆபத்தான நிலை வரும்போது குறித்த தொற்றாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

நோய் அறிகுறி இன்றி கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.LNW