வெறிச்சோடிய கொக்கட்டிச்சோலை பகுதி

(படுவான் பாலகன்) கொவிட் 19 கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டும், தொற்றினை கட்டுப்படுத்துமுகமாக நேற்று (14)முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடையின் காரணமாக இன்று(15) கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதிகள்  மக்கள்  நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டடன.

கடைகள் யாவும் பூட்டப்பட்டு காணப்பட்டன. முப்படையினர் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக  ஒரு சிலர் மாத்திரம் பயணம் மேற்கொண்டமையை காணமுடிந்தது.