நோன்புப் பெருநாள் தினத்தன்று அம்பாறை மாவட்டம் முழுவதும் கறுப்புக் கொடி

பைஷல் இஸ்மாயில்
அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக்கொடி கட்டும் அமைதி வழிப்போராட்டம் புனித நோன்புப் பெருநாள் தினமான நேற்று 14 அம்பாறை மாவட்ட பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் மற்றும் பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், மார்க்கத் தலைவர்கள் பலரும் குற்றம் நிருபிக்கப்படாமல் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளைதக் கண்டித்தும்
நோன்புப் பெருநாள் தினத்தில் சகல
முஸ்லிம்களும் தமது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பறக்கவிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பகிரங்க வேண்டுகோள் விடுத்து முதலாவது கறுப்புக் கொடியையும் கட்டி வைத்தார்.
அதனையடுத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்றய தினம் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,
ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, இறக்காமம், மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.