கிண்ணியாவில்இலங்கை மின்சாரசபை ஊழியர் கொவிட் தொற்றினால் மரணம்.

திருகோணமலையில் உள்ள இலங்கை மின்சாரசபையில் கிண்ணியாவில் கடமையாற்றும்  ஒருவர் கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவரே கொவிட் தொற்று காரணமாக  உயிரிழந்த முதலாவது மின்சாரசபை ஊழியர் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஒரு அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர் 40 வயதான இரு பிள்ளைகளின் தந்தை என கிண்ணியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மின்சார  சபையில்  மரணமடைந்த நபரின் மனைவிக்கு பொருத்தமான வேலை வழங்குமாறு  அமைச்சர் டலஸ் அலகபெரும சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என   கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.