மட்டக்களப்பில் முடக்கப்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் விடுவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரில் அண்மையில் கொரனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட திசவீரசிங்கம் சதுக்கத்தை விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின்போது தொற்று எவருக்கும் உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.