மட்டு வைத்தியசாலைகளிலிருந்து 55 கொவிட் தொற்றாளர்கள் பூரண சுகத்துடன் வீடுதிரும்புகின்றனர்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

இலங்கையிலும் கொவிட் 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கொவிட் நோயாளர்களை குணப்படுத்தும் மூன்று வைத்தியசாலைகளிலும் இருந்து இன்றைய தினம் அதிகளவிலானோர் குணமடைந்து வீடு திரும்புவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைவாக,
கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து 19 பேரும், (யாழ்ப்பாணம் -1, மட்டக்களப்பு -14, திருகோணமலை – 3, கெக்கிராவ – 1)

காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து 18 பேரும் (திருகோணமலை – 17, மொனராகலை – 1)

கல்லாறு வைத்தியசாலையில் இருந்து 18 பேருமாக (மட்டக்களப்பு – 17, திருகோணமலை -1)

இவ்வாறாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த 55 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது