கல்முனைப்பிராந்தியத்தில் இளம் பெண் கொவிட்டுக்குப்பலி.

வேதாந்தி

கல்முனை பிராந்தியத்தில் அட்டாளைச்சேனைசுகாதாரப்பிரிவுக்குட்பட்டதீகவாவிப்பிரதேசத்தில் வசித்துவந்த39வயதுடைய இளம்பெண்னொருவர் கொவிட் தொற்று காரணமாக அம்பாறை பொது வைத்தியசாலையில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மரணமடைந்துள்ளார்.

கொவிட் 3வது அலைக்குப்பின் கல்முனைப்பிராந்தியத்தில் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.

குறிப்பிட்ட மரணத்துடன் கல்முனைப்பிராந்தியத்தில் இதுவரை 13மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன்,   3வது அலையில் கிழக்கு மாகாணத்தில் தொற்று குறைந்த பிராந்தியமாக கல்முனைப்பிராந்தியம் காணப்படுகின்றது. இதுவரை 58பேர் தொற்றுக்குள்ளாகியதுடன்,  தற்போது 21பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.