பசில் வெளிநாடு பறந்தார்.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி சிறப்பு பணிக்குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளார்.

பல மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஜராகவும் சிகிச்சை பெறவும் அவர் இன்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டதாக அறியப்படுகிறது.

கடந்த டிசம்பர் மற்றும் கடந்த ஏப்ரல் மாதங்களில் பசில் ராஜபக்ஷ இந்த பயணத்தைத் திட்டமிட்டிருந்தாலும், நாட்டின் நிலைமை காரணமாக இந்த பயணம் தாமதமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெளிநாடு சென்ற திரு. பசில் ராஜபக்ஷ, கிட்டத்தட்ட ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி, அதற்கான சோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற்று இலங்கைக்குத் திரும்புவார் என்று அறியப்படுகிறது.