உக்ரைன் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பிரிட்டிஷ் கொரனா வகை நாட்டுக்குள்

உக்ரைன் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பிரிட்டிஷ் கொரோனா வகை சமீபத்தில் இலங்கைக்குள் நுழைந்தது தெளிவாகத் தெரிந்ததுள்ளது என  மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இந்த   தொற்று எவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.உலகில்  தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள நான்கு  வகை கொவிட் தொற்றுக்களில் மூன்று வகைகள் ஏற்கனவே இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.