நாட்டை முடக்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

நாட்டை   முடக்குவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார் கோவிட் 19 விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.

அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று ராணுவத் தளபதி தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையேயான பயணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முப்படைகளையும் நிலைநிறுத்துவதன் மூலம் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  மேலும்தெரிவித்தார்.