தனியார் பஸ் இயக்குனர்களுக்கு  முறையான தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுங்கள்

கொரோனா ஆபத்தில் இயங்கும் தனியார் பஸ் இயக்குனர்களுக்கு  முறையான தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுங்கள். இல்லையெனில், அவர்கள் அடுத்த வாரம் முதல் சேவையில் இருந்து விலகுவார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்னே  தெரிவித்தார்..

பஸ் தொழிலாளர்களுக்கு முறையான தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தயாரிக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தை அவர் கோரியுள்ளார், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேலும் தெரிவித்தார்.