மட்டக்களப்பில் மட்டு. மத்தி கல்வி வலயமே உயர்தர பரீட்சைப்பெறுபேறுகளில் முன்னிலையில்.

(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
அண்மையில் வெளியிடப்பட்ட கபொத உயர் தர பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் மட்டு. மத்தி கல்வி வலயம் முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்கள் உள்ளதனால் இம்மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழக்ததிற்குத் தெரிவாகும் மாணவர்களில் விகிதாசார அடிப்படையில் 5 இல் ஒரு பகுதியினரே மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குக் கிடைக்க வேண்டுமெனக் கொள்ளும் பட்சத்தில் இம்முறை இவ்வலயத்திலிருந்தே அதிகப்படியான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக  வலயக்கல்விப்பணிமனையின் தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்  பிரகாரம்…
1) மருத்துவத்துறைக்கு மாவட்டத்தில் தெரிவாகவுள்ள சுமார் 30 பேரில் 13 பேர் மட்டு. மத்தி கல்வி வலயத்தைச் சேர்ந்தவர்களாவர்.
2) பொறியியல் துறைக்கு தெரிவாகவுள்ள சுமார் 40  பேரில் 11 பேர் மட்டு. மத்தி வலய மாணவர்களாவர்.
3) வணிக துறைக்கான சுமார்  120 பேரில் 54 பேர் மட்டு. மத்தி வலய மாணவர்கள்.  மாவட்டத்தில் (டொப் டென்) முதல் பத்துப்பேரில் 1,2,3,5,6,8 மற்றும் 9 ஆவது இடங்கள் மட்டு. மத்தி கல்வி வலயத்திற்கே கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

4) தொழில்நுட்பத்துறைக்கான சுமார்  60 பேருக்கு 30 பேர் மட்டு. மத்தி வலய மாணவர்களாவர்.
இதேவேளை கலைத்துறையில் 60 மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அனைத்துதரப்பினருக்;கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
இதேவேளை  கடந்த முறை வெளியிடப்பட்ட கபொத சாதாரண தர பரீட்சையில் 66 சத வீதமானவர்கள் சித்தியடைந்தமை தெரிந்ததே.