குச்சவெளியிலும் கொவிட் கட்டுப்பாடுகள்.

எப்.முபாரக்  2021-05-05
நாட்டில் கொவிட் 19 ன் மூன்றாவது அலை மிக வேகமாக   திருகோணமலை மாவட்டத்திலும் பரவி வருவதன் காரணமாக திருகோணமலை மாவட்ட செயலாளரின் உத்தரவிற்கு அமைவாக  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை கொரோனா பரவலில் இருந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட  மொத்த வியாபார நிலையங்கள், சில்லறை கடைகள், மீன் கடைகள், மற்றும் பாமசி போன்ற அத்தியாவசிய கடைகளை  தவிர்ந்த  ஏனைய அனைத்து கடைகள், வியாபார நிலையங்களை   மறு அறிவித்தல் வரை மூடி விடுமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக்கினால் இவ்வறிவித்தல் இன்று(5) விடுக்கப்பட்டுள்ளது.