திருகோணமலையில் நேற்றும் இருவர் கொவிட் தொற்றினால் மரணம்.

திருகோணமலையில் நேற்றும் இருவர் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.     அன்புவெளிபுரம் ,உவர்மலைபிரதேசத்தைச்சேந்தவர்களே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உவர்மலையில்  உயிரிழந்தவரின்  குடும்பத்தில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குறிப்பிட்ட மரணங்களுடன் 3வது அலையின் பின்னர் இதுவரை10பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை திருகோணமலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை திருகோணமலை பிரதான தபாற்கந்தோரில்  பணியாற்றும் ஒன்பது பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.