அரசியல் போர்நிறுத்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

தனது அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிறேமதாச இலங்கையர்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற அரசு மற்றும் பிற கட்சிகளை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு ஸ்தம்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய எம்.பி. பிரேமதாசா, இதன் விளைவாக, நாட்டின் 20 மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்காக  நாங்கள் ஓர் அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்

இந்த நெருக்கடியின் போது அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக பணியாற்ற வேண்டும் .

தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் புறக்கணித்து, அதன் பொறுப்பை தேசத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.