இலங்கைக்கு ஒரு விமானத்தில் அதிகபட்சம் 75 பயணிகளே பயணிக்கலாம்.

நாளை அதிகாலை 04.00 மணி முதல் நாட்டிற்கு வரும் விமானங்களைமட்டுப்படுத்தமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு கொண்டு வரப்படும் பயணிகளின் எண்ணிக்கையை ஒரு விமானத்திற்கு அதிகபட்சம் 75 பயணிகளை மட்டுப்படுத்துமாறு இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின்  தலைவர் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளார்.

தலைவர் கூறுகையில், இது நாளை (மே 03) முதல் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும்.

இலங்கைக்கு சர்வதேச விமானங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள்  ஏற்றிவரப்படுவதாக சமீபத்திய பதிவுகள் காட்டியுள்ளன என்றும், அந்த எண்ணிக்கை சில விமான நிறுவனங்களுக்கு 200 பயணிகளைக்கூட தாண்டியுள்ளது என்றும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கள நிலைமையைக் கருத்தில் கொண்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.