கிழக்கில் வீனாப்போன கொவிட் தடுப்பு மருந்துகள்.

கிழக்கு மாகாணத்தில் பிரபல அரசவைத்தியசாலையொன்றில் 600பேருக்கு ஏற்றக்கூடிய கொவிட் தடுப்பூசி அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் வீணாகப்போன சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

மாகாணத்தில் நேற்று இரண்டாம் கட்டதடுப்பூசிகள் ஏற்றப்பட்டநிலையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டபின்பு 57 மருந்து நிரப்பட்ட குப்பிகள் குளிர்சாசனபெட்டிக்குள் வைக்காமல் வெளியில் வைக்கப்பட்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்றுமாலை ஐந்துமணிக்கு வைக்கப்பட்ட மருந்துக்குப்பிகள் இன்றுகாலை எட்டு மணிவரை குளிர்சாதனப்பெட்டியில் இல்லாமல் வெளியில் இருந்துள்ளது.இதனால் குறிப்பிட்ட தடுப்பூசிமருந்துகளை பயன்படுத்தமுடியாத நிலைஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 4பாகைதொடக்கம் 8பாகைவரையிலான குளிர்சாதனப்பெட்டியில் வைக்கபடவேண்டிய தடுப்பூசிமருந்து கிட்டத்தட்ட 15மணித்தியாலம் 28பாகைவெப்பநிலையில் வெளியிலிருந்துள்ளது.

தற்போது தடுப்பூசிக்கு அதிகமதிப்புள்ள காலகட்டத்தில் அதிகாரிகள் இவ்வாறான அசமந்தப்போக்கினை தவிர்ப்பது சாலப்பொருத்தம் என பொதுசனங்கள் பேசிக்கொள்கின்றனர்.