ரிஷாட் பதியூதீனிற்கு, இந்தியாவின் கேரளாவுக்குமிடையிலான தொடர்பு. இந்தியாவில் விசாரணைகள்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கு, இந்தியாவின் கேரளா மாநிலத்துடன் காணப்பட்ட தொடர்புகள் குறித்து இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்யது..

ரிஷாட் பதியூதீன் 2009ம் ஆண்டு கேரளாவின் கசராகொடி பகுதிக்கு சென்று, அங்குள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோன்று, ரிஷாட் பதியூதீன், அமைச்சராக பதவி வகித்த 2013ம் ஆண்டு காலப் பகுதியில், அவர் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், குறித்த தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அந்த நாட்டு புலனாய்வு பிரிவினர், கேரளா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று, ரிஷாட் பதியூதீனின் தந்தை, கேரளாவின் கசராகொடி – படினா பகுதியில் பிறந்துள்ளதாகவும், அதனால், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அங்குள்ள பலருடன் தொடர்புகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கேரளாவின் கசராகொடி பகுதியிலுள்ள 5 முஸ்லிம் குடும்பங்கள், அந்த பகுதியிலிருந்த தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தலைமறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 2016ம் ஆண்டு சிரியாவிற்கு தப்பிச் சென்று, ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களில் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.