மூதூர் அக்கரைச்சேனையில் மரணமானவரின் சடலம் ஓட்டமாவடிக்கு.

பொன்ஆனந்தம்
மூதூர் அக்கரைச்சேனையில் மரணமானவரின் சடலம் ஓட்டமாவடி பிரத்தியேக மயானத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம். ஆருஸ் தெரிவித்துள்ளார். இவரது மரணம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 28.04.2021ஆம் திகதி அக்கரைச் சேனை, மூதூர்-01 இனை நிரந்தர பிறப்பிடமாகக் கொண்ட காசீம் என்பவர் மரணமான செய்தி கேட்டு மிகவும் கவலை அடைகிறோம்.
அன்டிஜன்(Antigen) பரிசோதனையில் Possitive என காணப்பட்டதன்த விளைவாக பல முயற்சிகளை மேற்க் கொண்டு மூதூரில் அடக்கம் செய்ய முயற்சித்த போதும் இறுதியில் கை கூடவில்லை.
இன்று 29.04.2021 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, புனித ரமலான் மாதத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பதை எண்ணி மிகவும் கவலையடைவதுடன் அன்னாரின் மறுமை வாழ்வுக்கும், ஈடேற்றத்திற்கும், குடும்பத்தாரின் கவலைகள் மற்றும் ஆறுதல் வேண்டி அனைவரும் ஒவ்வொரு நேரத் தொழுகையில் துஆச் செய்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என தவிசாளர் எம். எம். ஏ. அரூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.