கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் கொவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இன்று திருகோணமலை மாவட்டத்தில் சில சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்துள்ளதாகவும், நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும்  இத் தடுப்பூசியை ஏற்றப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக சுகாதாரத் துறையினருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது