மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 16, வது ஆண்டு நினைவு இடம்பெற்றது.

மாமனிதர் சிவராமின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (29/04/2021) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணகுமாரின் தலைமையில் மட்டு ஊடக அமையத்தில் நினைவு தினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

இந்த வணக்க நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் மறைந்த சிவராம் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு தீபத்தை ஏற்றினார்.

கொரோணா வைரஸ் நடைமுறைகள் காரணமாக மட்டும்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.