ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை.உபுல் ரோஹான

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், நாட்டில் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு டிதாடர்ந்து கருத்துதெரிவிக்கையில்

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கின்றது. இதனால்எதிர்காலத்தில் நாடு பெரும் ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

இன்று நாடு முழுவதும் கொரோனா கொத்தணிகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன, சில பகுதிகளில் நடத்தப்பட்ட சீரற்ற பீ. சி.ஆர் சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் சுமார் 30% ஆகும்.

உடனடியாக  நாட்டைப் பூட்ட வேண்டும், துணைக்கொத்தணிகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்..