இலங்கை ஒரு கட்சிக்குரிய நாடு அல்ல சஜித் பிறேமதாச

இலங்கை ஒரு கட்சிக்குரிய நாடு அல்ல,  அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஜனநாயக நாடு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று கொழும்பை தளமாகக் கொண்ட பல தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்திருந்தார்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மனித உரிமைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் நாட்டிற்கு அபிவிருத்தி உதவி தொடர்பான விடயங்கள் குறித்து விவாதித்துள்ளோம்.

இந்த விவாதங்கள் நாட்டை இழிவுபடுத்தும் அல்லது தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியின் ஒரு பகுதியாக இல்லை

“இந்த பேச்சுக்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அல்ல. அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாக்க எங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது,

கொரோனா வைரஸ் நிலைமையுடன் இலங்கையில்  தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் பற்றாக்குறைஉள்ளது.இந்த பிரச்சினைகள் இராஜதந்திரிகளிடமும்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் .அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுகின்ற வெளியுறவுக் கொள்கையை அரசாங்கம் காண வேண்டும் என்றார்.