கிழக்கில் அதிகரிக்கும் கொவிட் தொற்று 12மணித்தியாலத்தில் 95பேர்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12மணிநேரங்களில் 95பேர் கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரசேவைகள் பணிமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அம்பாறை பிராந்தியத்தில்60, மட்டக்களப்பு 18, திருகோணமலை 14, கல்முனை 3 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருமலையைச்சேர்ந்த 268, அம்பாறை132, மட்டக்களப்பு51, கல்முனை 04பேர் என என சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மொத்தமாக இதுவரை4190பேர் கொரனா தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் இவர்களில் 3732பேர் குணமடைந்துவீடுதிரும்பியுள்ளனர்.

தற்போது 455பேர்சிகிச்சைபெற்றுவரும் நிலையில் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 26பேர் மரணமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.