கொரோனா வேகமாகவும் ஆபத்தானதாகவும் பரவுகிறது .. தொற்றுநோய் பிரிவு தரவுகளை மறைக்கிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை தற்போது அதிக ஆபத்தில் உள்ளது என  டாக்டர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் பிரத்தியேகமாக செய்திச்சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர்தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்

நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த பயண கட்டுப்பாடுகள் உடனடியாக விதிக்கப்பட வேண்டும்

தற்போது இலங்கை மூன்றாவது அலையின் தொடக்கத்தில் மட்டுமே உள்ளது

தொற்றுநோயியல் பிரிவு வைரஸ் பரவுவது குறித்த துல்லியமான தரவை வழங்கவில்லை என்றும் இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் அவர் கூறுகிறார்.