மாலைதீவுக்குள்நுழையும் சுற்றுலாப்பயணிகளுக்கு விமானநிலையத்தில் கொவிட் தடுப்பூசி.

மாலத்தீவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறையை  ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவ்ஸூன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மூன்று படிகள் மூலம் நாட்டில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகளையும் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.