ராம் கராத்தே சங்கத்தின் தரப்படுத்தல் பரீட்சையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பிரதேச கராத்தே தோ மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் ராம் கராத்தே சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் சென்சீ ஜீ ரதீஸ்;பிரபாவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்று இருந்தன.

இதன்போது ராம் கராத்தே தோ சங்கத்தின் மாணவர்களின் தரப்படுத்தல் பரீட்சைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் கலந்து கொண்டு இருந்ததுடன்

திருக்கோவில் பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.இரவீந்திரன் கலைமகள் பாடசாலை அதிபர் ஜே.வசந்த இந்திரசிறி; ராம் கராத்தே தோ சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி சிரேஷ்ட போதனாசிரியரும் உப அதிபருமான செயினுஸ் ஆப்தீன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.