மட்டு- திருமலைவீதி ஊறணியில் வாகனவிபத்து .மூன்றுபேர் படுகாயம்.

ஏறாவூர் நிருபர்-நாஸர்)

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் ஊறணி பிரதேசத்தில் 20.04.2021 மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு கெப் ரக வாகனங்களும் ஒன்றோடொன்று மோதியுள்ளன.
வாவியோரமாக வேகமாகச் சென்ற முச்சக்கர வண்டியும் கெப் வாகனம் ஒன்றும் மோதியதையடுத்து மேலும் இரண்டு வாகனங்கள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தினையடுத்து இவ்வீதியில் வாகன போக்குவரத்து சற்றுநேரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.