சர்வாதிகாரம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்

சர்வாதிகாரத்தை பலர் விமர்சித்தாலும், குறைந்தது இரண்டு வருடங்களாவது இத்தகைய சர்வாதிகாரம் இல்லாமல் நாட்டை கட்ட முடியாது.  ஆட்சியாளர்களால் மக்களுக்கு வழங்கப்படும் வரம்பற்ற சுதந்திரம் நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான தடையாகும் என அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்  அவர் இன்று (19) கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஜனாதிபதியாக, சில சமயங்களில் நாட்டின் அபிவிருத்திக்கு கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இதுபோன்ற கடுமையான முடிவுகள் நாட்டின் நன்மைக்காக அங்கீகரிக்கப்படுகின்றது.

சர்வாதிகாரத்தை பலர் விமர்சித்தாலும், குறைந்தது இரண்டு வருடங்களாவது இத்தகைய சர்வாதிகாரம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்பமுடியாது.

நேரடி முடிவுகளை எடுப்பதிலும், நாட்டை சிறந்த இடமாக மாற்றுவதிலும் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ முன்னிலை வகிப்பார் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.