இன்று முதல் மீண்டும் 5 ஆயிரம் ரூபா.

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக இன்று (15) முதல் சமுர்தி பெறுநர்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதை அரசாங்கம் மீண்டும் தொடங்கும் என்று சமூர்த்தி   திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டின் போது ரூ. 5,000 கொடுப்பனவு நேற்று (14) மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பண்டுலா திலகசிறி தெரிவித்தார்.

இன்று (15) முதல் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.