திருக்கோவில் பிரதேசத்தில் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தை

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சமூர்த்தி அபிமானி திட்டத்தின் கீழ் சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனைச் சந்தை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தம்பிலுவில் மற்றும் விநாயகபுரம் சமூர்த்திச் வங்கி சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (09) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளன.

அரசாங்கத்தின் சமூர்த்தி அபிமானி வேலைத் திட்டத்தின் ஊடாக சமூர்த்திப் பயனாளிகளினால்   உற்பத்திப் செய்யப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்பத்திக் கொடுப்பதுடன் அவர்களை வியாபார ரீதியாக முன்னேற்றமடையச் செய்வதே இவ் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தொழில் முயற்சியாளர்களுக்காக வங்கிக் கடன்களும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இவ் சமூர்த்தி அபிமானி விற்பனைச் சந்தையின் ஆரம்ப நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளருமான வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இருந்ததுடன்

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமூர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தன