தந்தையை இழந்த 300 எழைச் சிறார்களுக்கு புதிய உடைகள் அன்பளிப்பு

(வயிரமுத்து திவாகரன்)

தந்தையை இழந்த 300 எழைச் சிறார்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதிய உடைகள் அன்பளிப்பு எனும் தொனிப்பொருளின் கீழ் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு  சமூக நலன்புரி அமைப்பு (SWO) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதிய உடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு (09)இன்று வெள்ளிக் கிழமை திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.

இவ் அமைப்பானது 1996ஆம் ஆண்டு திருப்பழுகாமத்தினை சேர்ந்த சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு கடந்த 25ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

அதுமட்டுமல்லாது இவ் நிறுவனமானது தாய் தந்தையை இழந்த அல்லது வறிய நிலையில் உள்ள சிறார்களுக்காகா திலகவதியார் மகளீர் இல்லத்தினை ஆரம்பித்து அவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்ல்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது அத்துடன் தற்போது இவ் அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் தந்தையை இழந்து குடிசைகளில் வாழும் 300 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டில் ஆரபித்தது நடைமுறைப்படுத்தி வருகின்மை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ் இவ் அமைப்பிற்கு நன்கொடைகள் வழங்கும் வெளிநாடுகளில் வாழும் அன்பர்களின் நன்கொடைகள் மூலமாக  புதிய உடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது என இவ் அமைப்பின் தலைவர் திரு.வே. பாஸ்கரன் தெரிவித்தார்

இவ் நிகழ்வுக்கு அழைப்பு அதிதிகளாக போரதீவுபற்று பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கமல்ராஜ் அவர்களும், அபிவிருத்தி இணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும், கிராமஉத்தியோகத்தர் திரு.முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான சேவை எம் சமூகத்துக்கு அளப்பெரியது இவ்வாறான சேவையினை தொடந்து எம் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறான சேவைகளை தொடர்ந்தும் இடைவிடாது செயற்படுத்திவரவேண்டு எனவும் குறிப்பிட்டிருந்தனர்.