வீதி விபத்தில் சாரதி மற்றும் அதில் பயணித்த நபர் இருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர்

பைஷல் இஸ்மாயில் –

திருகோணமலை கிண்ணியா பிரதான வீதியில் சீனக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டிச் சாரதி மற்றும் அதில் பயணித்த நபர் இருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து முச்சக்கர வண்டிச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளது.

இந்த வீதி விபத்து இன்று (04) இடம்பெற்றது. இது தொடர்பில் தெரிய வருகையில், மூதூர் பிரதேசத்தில் வசிக்கு கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்கள் இருவர் திருகோணமலை நகரிலுள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு மீண்டும் மூதூர் நோக்கிச் செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், முச்சக்கர வண்டியின் வேகமடக்கி இயங்காமல் போனதன் காரணமாகவே வாகனம் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியதாக முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்தார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.