33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான விளையாட்டு போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெறும் 33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான விளையாட்டு போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 04 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரியும்,பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளருமான எம்.ஐ.எம்.றம்ஸியின் ஒருங்கிணைப்புடன் காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எஸ்.ஏ.ஏ.சுஜா தலைமையில் இடம்பெற்ற  அங்குரார்ப்பன நிகழ்வில் அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் ஜேபி,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி,காத்தான்குடி ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் கே.எல்.எம்.அனீஸ் (பலாஹி), காத்தான்குடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.நிம்ஹால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது முதற்கட்டமாக கிரிக்கட் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து அதிதிகளினால் காத்தான்குடி பிரதேசத்திற்கான புதிய பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகளுக்கான நியமனக் கடிதம், பிரதேச இளைஞர் கழக சம்மேளன அடையாள அட்டை,டீசேட் என்பன உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 23 இளைஞர் கழகங்களில் 12 இளைஞர் கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குகொள்ளும் குறித்த விளையாட்டு விழாவில் கிரிக்கட்,கயிறு இழுத்தல்,கரம்,கரப்பந்து,உதைப்பந்து,கடற்கரை கரப்பந்து,எல்லே போன்ற விளையாட்டு போட்டிகள் காத்தான்குடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம்,ஜாமிஉல்ழாபிரீன் வித்தியாலயம்,விக்டரி விளையாட்டு மைதானம்,கடற்கரை போன்ற இடங்களில் நடைபெறவுள்ளன.
04 இன்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட காத்தான்குடி பிரதேசத்திற்கான 33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.