மலையகத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் வைகறை நூலகம்

இன்றைய தினம்(2021/04/03) மலையகத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் முதலாவது நூலகமான *வைகறை நூலகம்* “வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” எனும் தொனிப்பொருளில் இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

சிறப்பு அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியும் தற்போது சட்டத்தரணியாக பணியாற்றி வரும் சமூக செயற்பாட்டாளர் சு.விஜயகுமார் அவர்களும் கிழக்குப்பல்கலைகழக பட்டதாரியும் தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் செ.செல்வமரியாள்  ஆசிரியை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் மலையக தமிழ் பட்டதாரி ஒன்றிய உறுப்பினர்கள், சிகரம் அமைய உறுப்பினர்கள், முத்தமிழ் நற்பணி மன்ற உறுப்பினர்கள், கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என அனைவரும் இத்திறப்புவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாறாக இப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகத்தினூடாக அனைத்து தரப்பினரும்,குறிப்பாக பாடசாலை மாணவர்கள் தமது வாசிப்பு பழக்கத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இந்நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன்  சிறகுகள் அமையத்திலிருந்து எங்களுக்கு 850க்கும் மேற்பட்ட தமிழ்,ஆங்கில நூல்கள் கிடைக்கப்பெற்றது.மேலும், இவ்வாறான சமூக செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. இதுபோன்ற பல செயற்பாடுகள் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது எமது ஒன்றியத்தின் நோக்கமாகும்.