திருமலையில் மீன்பிடிக்கச்சென்றவர் சாவு.சந்தேகத்தில் மூவர் கைது.

திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் ரிசினி துவா என்ற படகில் நீண்ட மீன் பிடி பயணத்தின் போது திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த கலப்பதி ஆராச்சிகே ராண்டி ரதீசா லக்சான் மார்ச் 31 கடலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இப்படகு இன்று (2) திருகோணமலை கொட்பே துறைமுகத்தினை அடைந்த போது அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது.
உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் பொலிஸார் வந்ததோடு,படகில் சென்ற மற்ற மூன்று சந்தேக நபர்களை விசாரணைக்காக அழைத்துச்சென்றதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.