மட்டக்களப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான் , ரக்ஸனா  )

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கம் ஏற்பாடு செய்த கடினப்பந்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 01.04.2021 அன்று டீயவவi நுயளவ டுயபழழn ர்ழவநட இல் பிற்பகல் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் .N.டீ. ரஞ்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பல இலட்சம் ரூபா பெறுமதியான கடினப்பந்து கிரிக்கெட் உபணங்கள் பதிவு செய்யப்பட்ட கடினப்பந்து கழகங்களுக்கும், பாடசாலைகளுக்கும் மேலும் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கு உதைபந்தாட்ட உபணங்களும்கௌரவ அமைச்சர் அவர்களால் வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் கௌரவ எஸ். வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கௌரவ எஸ். சந்திரகாந்தன் (பா.உ), பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், கடின பந்து விளையாடும் பாடசாலையின் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் வி.பிரதீபன் அவர்களின் நன்றியுரை கூறப்பட்டது.