வாகரையில் காணிப்பிணக்குகளை தீர்க்க நடவடிக்கை.

வாகரை பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்களிடம் காணப்படும் காணி சம்மந்தமான பிணக்குகளை சுமுகமாகவும், விரைவாகவும் தீர்ப்பதற்கான திட்டத்தினை நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் செயற்படுத்துகிறது.

இத்திட்டத்தின் தொடர் செயற்பாடாக வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேனி கிராம சேவகர் காரியாலயத்தின் மண்டபத்தில் காணி பிணக்குகள் தொடர்பான விழிப்புணர்வுடன் நடமாடும் சேவையும் இன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் க.குருநாதன் மற்றும் காணி விசேட மத்திஸ்த சபையின் உறுப்பினரான பாஸ்தியாம்பிள்ளை, மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினார்கள். அத்துடன் நடமாடும் சேவையினூடாக முறைப்பாட்டாளர்களிடம் இருந்து பிணக்குகள் தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

இந்நிகழ்வில் லிப்ற் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் எஸ்.தயாநிதி மற்றும் கள உத்தியோகத்தர் திருமதி.லதா ரவீந்திரன் மற்றும் சமூக ஊக்குவிப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.