சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக கணேசசுந்தரம் குலமணி சத்தியப் பிரமாணம்

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட்,நௌஷாட் அவர்களின் முன்னிலையில் தவிசாளர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஆர்.வளர்மதி, ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக வளத்தாப்பிட்டி 10ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளராகவும் பதவிவகித்து அதன் பின்னர் உறுப்பினராக பதவி வகித்து வந்த வெள்ளி ஜெயச்சந்திரன் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திக்கே கணேசசுந்தரம் குலமணி அவர்கள் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்த கணேசசுந்தரம் குலமணிக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் பிரதேச சபை உறுப்பினருக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களையும் வழங்கி வைத்தார்.