வீணையடி நீ எனக்கு” நாவல் வெளியீட்டு நிகழ்வு.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் முப்பத்தெட்டாவது பெளர்ணமி கலை இலக்கிய நிகழ்வு நேற்று 28.03.2021  மாலை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அ.நவேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக வாழ்வியலை எடுத்தியம்பும் முதல் நாவலான “வீணையடி நீ எனக்கு” நாவல் வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் பிரதிநிதிகளால் நூலாசிரியர் மைக்கல் கொலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கவி பாடி, நினைச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வில் சமூக சேவையாளர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கலையார்வமுள்ளவர்கள் அடங்களாக சுகாதார முறையைப் பின்பற்றி பலரும் கலந்துகொண்டிருந்தனர்.