மட்டக்களப்பு போரதீவில்முச்சக்கர வண்டி திடிரென தீப்பற்றி எரிந்தது.

கமல்
எரிபொருள் நிரப்பி விட்டு கடைமுன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடிரென தீப்பற்றி எரிந்த சம்பவம் மட்டக்களப்பு போரதீவில் இடம் பெற்றுள்ளது.

வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு அருகில் உள்ள கடைக்கு முன்னால் நிறுத்திய வேளை திடிரென முச்சக்கரவண்டி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட கடை உரிமையாளர் அயலவர்கள் முச்சக்கர வண்டி சாரதியை வெளியேறுமாறு கூறி தீயை துரிதமாக செயற்பட்டு அணைத்துள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியானது  முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இவ்வாறு திடிரென தீப்பற்றியமைக்கான காரணம் எரிபொருள் நிரப்பியமையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது… ..