விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ரீ.எல்.ஜவ்பர்கான்–
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகு பொலிஸார் தெரிவித்தனர்..

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சம்பங்கேணி வீதி சேனைத்துறை மகிழூர் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வதுடைய நாகேந்திரன் டிலக்ஷன் என்பவர் கடந்த 19ம் திகதி மகிழூர் பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொணடிருக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தரித்து நின்ற லோறியுடன் மோதிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை  திகதி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.