அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக கமல் நெத்மினி

காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரி எஸ்.எல்.எ.கமல் நெத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை அதிகாரியான இவர் நேற்று கடமையேற்றுள்ளார். அம்பாறையைச்சேர்ந்த  இவர், ஏலவே மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளராகக்கடமையாற்றியவராவார்.

உள்ளுராட்சி உதவி ஆணையாளராக இருந்த எ.ரி.எம்.றாபி அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளராக இடமாற்றம்பெற்றுச் சென்றதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நெத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய ஆணையாளர் நெத்மினி நேற்று மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சிமன்றத்தலைவர்களை அழைத்து அறிமுகநிகழ்வை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.