நச்சு தேங்காய் எண்ணெயை இறக்குமதி சங்கம் குற்றம்சாட்டு

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் நச்சு தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து நாடு முழுவதும் மக்களை படுகொலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் புத்திகா அல்விஸ் தெரிவித்தார்.

நச்சு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தேவைப்பட்டால் அரசாங்கத்தை மட்டுமல்ல, முழு நாட்டையும் வாங்குவதற்கு போதுமான பணம் அவர்களிடம் உள்ளதாகவும் – பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மற்ற மாவட்டங்களிலிருந்து தேங்காய் எண்ணெய் பெறப்பட்டு மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.